China pledges Sri Lanka sovereignty: இலங்கையின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் சீன அதிபர் சொல்ல வருவது என்ன ?

இலங்கையின் இறையாண்மை பாதுகாக்கப்படவேண்டும் என்ற கருத்தை, சீன அதிபர் அனுராவுடன் நடந்த கலந்துரையாடலில் பேசும் போது குறிப்பிட்டுள்ளார். அதவாது ஒரே சீனா என்ற கொள்கை போல ஒரே இலங்கை என்ற கொள்கையோடு இலங்கை இருக்க வேண்டும் என்பதே சீனாவின் விருப்பமாக உள்ளது. இது பற்றி மிகவும் ஆழமாக கருத்தைச் சொல்லப் போனால், இரு தேசம் ஒரு நாடு என்ற கோட்பாட்டிற்கே இங்கே இடம் இல்லை என்பது தான் கருத்து.

எப்படி சீனா தனது நாட்டில் உள்ள, ஒரு இன மக்களை இன்று வரை அடக்கி ஒடுக்கி ஆட்சி செய்து வருகிறதோ. அதே பாணியை இலங்கையும் பின்பற்ற வேண்டும் என்று சீனா விரும்புகிறதா ? என்ற கேள்விகள் இங்கே எழுகிறது. பலருக்கு நினைவு இருக்கும். 2009ல் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே உச்சக் கட்ட போர் நடைபெற்ற வேளை. அப்போது பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த, டேவிட் மிலபான் அவர்கள், ஐ.நா பாதுகாப்பு சபையில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார்.

முள்ளிவாய்க்கால் பரப்பை, யுத்த சூனியப் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்றும். அதன் மேல் விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என்று ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். இதனை தனது வீட்டோ அதிகாரத்தை பாவித்து ரத்துச் செய்தது சீனா தான். அன்று சீனா இதற்கு முட்டுக் கட்டையாக இருக்கவில்லை என்றால், இந்த அளவு மனிதப் பேரவலம் நிகழ்ந்து இருக்காது. ஐ.நா பாதுகாப்பு சபையின் ராணுவம் முள்ளிவாய்க்கால் சென்று இருக்கும். 

போர் முடிவுக்கு வந்திருக்கும், புலிகளின் தலைமை காப்பாற்றப் பட்டிருக்கும். ஆனல் அனைத்தும் அழிந்து போனது.  இந்தியா புலிகள் மீது கடும் கோபத்தில் இருந்தார்கள், அமெரிக்கா புலிகளை தடை செய்து இருந்தது. இதனால் சீனா புலிகளை ஆதரிக்க வேண்டாம், நடு நிலை வகித்திருக்கலாம். ஆனால் சீனா அப்படிச் செய்யவே இல்லை.

இலங்கைக்கு உதவவே சீனா அப்படி ஒரு முடிவை எட்டி இருந்தது. தற்போதும் இலங்கையின் இறையாண்மை குறித்தே சீன அதிபர் காட்டமாகப் பேசியுள்ளார். இது தமிழர்களை பொறுத்தவரை , அச்சுறுத்தல் விடுக்கும் விடையமாகவே பார்கப்படுகிறது.