cutting-edge night goggles: உக்ரைன் ராணுவத்திற்கு கிடைத்த படு பயங்கரமான தலைக் கவசங்கள்

உக்ரைன் ராணுவத்திற்கு நாளுக்கு நாள் கிடைத்து வரும் உதவிகள், அன் நாட்டு ராணுவத்தை உலகின் மிகவும் சக்த்திவாய்ந்த படையணியாக மாற்றி வருகிறது. அந்த அளவு உலக நாடுகள் அனைத்தும், உக்ரைன் ராணுவத்திற்கு உதவி வருகிறது. தற்போது உக்ரைன் ராணுவத்தின் சிறப்பு படைப் பிரிவுக்கு, அமெரிக்கா தனது, ENVG-B night-vision goggles வழங்கியுள்ளது.

cutting-edge AR night goggles மிகவும் சக்த்திவாய்ந்தவை. இவை ரஷ்ய ராணுவத்திடம் கூட இல்லை. சாதாரண இரவு நேர பார்வை சாதனமாக இது இயங்குவது இல்லை. எதிரி எங்கே இருக்கிறான், நெருங்கும் திசை. அருகில் உள்ள வேறு உயிரினங்கள், என்று அனைத்தையும் காட்ட வல்லது. ஒரு மனிதனின் கண்கள் பகல் நேரத்தில் எதனை எல்லாம் பார்கலாமோ, அதனையும் மிஞ்சிய பார்வையை இரவு வேளையில் இந்த தலைக் கவசம் கொடுக்கிறது. 

பொதுவாகச் சொல்லப் போனால், ஒரு போர் களத்தில் இந்த சாதனத்தை தலையில் அணிந்து கொண்டால், துல்லியமாக எதிரியை தாக்க இலகுவாக இருக்கும். மேலும் எதிரி நடமாட்டத்தை ஏனைய சக ராணுவத்தோடு பகிர்ந்துகொள்ள, நடமாட்டத்தை கண்காணிக்க என பல வகைகளில் இது உதவுகிறது. ஒரு வகையில் சொல்லப் போனால், உக்ரைன் ராணுவம் மிகவும் பலம் பொருந்திய ஒரு ராணுவமாக இனி உலகில் வளர உள்ளது.