தனி ஆளாக வீட்டில் இருந்து பார்கவே முடியாத ஆஸ்கார் வென்ற திகில் படங்கள் 4: OTT தளத்தில்


தனி ஒரு ஆளாக வீட்டில் இருந்து TVல் பார்க முடியாத திகில் படங்கள் சில உள்ளது. இவை எல்லாம் வெளியாகி பெரும் சக்கைப் போட்டு போட்ட படங்கள். உண்மையில் “The Omen” என்ற திரைப்படம், முதல் முறையாக வெளியாகி திரை அரங்கில் ஓடிக்கொண்டு இருந்தவேளை, பீதியில் ஒருவருக்கு ஹாட் அட்டாக்கே வந்துள்ளது. பின்னர் அம்பூலன்ஸ் வண்டி வந்து அவரை வைத்தியசாலை எடுத்துச் சென்றதால். படம் பாதியில் நிறுத்தப்பட்டது. பலர் பீதியில் எழுந்து வீட்டுக்குச் சென்றுவிட்டார்கள். இது போன்ற 4 முக்கிய படங்கள் தற்போது OTT தளத்தில் வந்துள்ளது. உங்களுக்கு துணிவு இருந்தால் பார்த்து திகில் அடையுங்கள்.

Number 1: The Omen, 1976ம் ஆண்டு வெளியான ஹாரர், மிஸ்ட்ரி திரைப்படம் The Omen. இப்படத்தை அமேசான் ப்ரைம் மற்றும் யூடியூப் ஓடிடி தளத்தில் காணலாம்.

Number 2: Black Swan: 2010ல் வெளியான சைக்கலாஜிக்கல் திரில்லர், ஹாரர் திரைப்படம் Black Swan. சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்ற இப்படத்தை அமேசான் ப்ரைம் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்த்து ரசிக்கலாம்.

Number 3: The Silence Of The Lambs: 1991ம் ஆண்டு வெளியான சீரியல் கில்லர், க்ரைம், சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் The Silence Of The Lambs. இந்த திகில் படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணலாம்.

Number 4: The Exorcist: 1973ல் வெளியான திகிலான திரில்லர் திரைப்படம் The Exorcist. சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது வென்ற இந்த திகில் திரைப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணலாம்.