gas engineer won £7.5m : கொடுக்கும் தெய்வம் கூரையை பிரித்துக் கொண்டு கொடுக்கும்

 

கேஸ் எஞ்சினியராக பயிற்ச்சி பெற்று வரும் 20 வயதே ஆகும் ஜேம்ஸ் என்பவர் 7.5மில்லியன் பவுண்டுகளை நஷனல் லாட்டரியில் வென்றுள்ளார். படிப்பு ஓடவில்லை என்று, பல்கலைக்கழகம் செல்லவில்லையாம் ஜேம்ஸ். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்தார். வாழ்கையே ஒரு சூனியமாக இவருக்கு,  இருந்து வந்தது. இன் நிலையில் தான் கேஸ் வேலைகள் செய்தால், நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று தெரிந்தவர்கள் சொல்ல.

ஒரு கேஸ் எஞ்சினியரிடம், வேலைக்குச் சேர்ந்து வேலையை கற்று வந்துள்ளார். இன் நிலையில் தான் அவர் போட்ட நஷனல் லாட்டரியில் இருந்து அவர் மோபைல் போனுக்கு ஒரு செய்தி வந்து இருந்ததாம். நீங்கள் ஒரு தொகையை வென்று உள்ளீர்கள். Monday Morning, எங்களை தொடர்பு கொள்ளவும் என்று. 

சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை ஜேம்ஸ் பெரும் குழப்பத்தில் இருந்துள்ளார். எப்பொழுது திங்கட்கிழமை வரும் என்று காத்திருந்துள்ளார். திங்கள் காலை, அவரது அப்பா அம்மா இருவரும் ஜேம்ஸ் அறைக்கு வந்து விட்டார்கள். மூவருமாக 9.00 மணி வரை காத்து இருந்துள்ளார்கள். 

காலை 9 மணி ஆன உடனே,  ஜேம்ஸ் லாட்டரி நிலையத்திற்கு அழைப்பை விடுக்க. அவர்கள் வென்ற தொகையை அறிவித்ததோடு. அவரது வங்கிக் கணக்கிற்கு உடனே அந்த தொகை வந்து விழும் என்றும் அறிவித்துள்ளார்கள். இதனை தான் அதிஷ்டம் என்பார்கள்.  

Source : https://www.dailymail.co.uk/news/article-14287661/engineer-wins-7-5million-lottery-day-unblocking-drains.html