UK Snow : 29ம் திகதி பிரிட்டனை தாக்கவுள்ள கடும் பனிப் புயல்

ஆட்டிக் ஐஸ் பரப்பில் ஏற்பட்ட குளிர் காற்று வெடிப்பு, மெல்ல மெல்ல நகர்ந்து ஐரோப்பா பக்கமாக வருகிறது. இன்னும் 14 தினங்களில் அது பிரித்தானியாவை கடக்க உள்ளதால் 29ம் திகதி மதியம் 12 மணி தொடக்கம் கடும் குளிர் நிலவ உள்ளது என MET வானிலை அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடும் பனிப் பொழிவு இருக்கும் என்றும் சில இடங்களில் மணித்தியாலத்திற்கு 2CM அளவு பனி பெய்யும் என்றும் வாநிலை மையம் மேலும் அறிவித்துள்ளது. ஸ்காட் லாந்து, அயர் லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகளில் -10 டிகிரி குளிர் இருக்கும் என்றும் லண்டன் போன்ற பகுதிகளில் -2 டிகிரி இருக்கும் என்றும் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

லண்டனில் வீதிகளில் பிளாக் ஐஸ் எனப்படும் பழிங்கு காணப்படலாம் என்றும், எனவே சாரதிகள் கவனமாக இருப்பது நல்லது என்றும் மெட் வானிலை மையம் தெரிவித்துள்ளது.