Israel and Hamas ceasefire: இஸ்ரேல் ஹமாஸ் யுத்த நிறுத்தம் அறிவிப்பு

 சற்று முன்னர் இஸ்ரேல் மற்றும் ஹாமாஸ் விடுதலை இயக்கம், நிபந்தனையற்ற யுத்த நிறுத்தத்தை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் ஹமாஸ் இயக்கம் பிடித்து வைத்திருந்த, பல பணயக் கைதிகளை அவர்கள் உடனே விடுதலை செய்து. அவர்களை ஸ்ரேலுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளார்கள். கடந்த 15 மாதங்களாக நடந்து வந்த கடும் போர் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. காஸாவில் பல ஆயிரம் மக்கள் இந்தப் போரால் உயிரிழந்தார்கள்.

24 இஸ்ரேலியர்களை ஹமாஸ் விடுதலை அமைப்பு விடுவித்துள்ள அதேவேளை, நல்லிணக்கமாக இஸ்ரேல் பிடித்து வைத்திருந்தா நூற்றுக்கும் மேற்பட்ட பாலஸ்தீன இளைஞர்களை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது. மூன்று அமெரிக்க அதிகாரிகள், பாலஸ்தீன அமைப்பான ஹமாசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த யுத்த நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனை ஹமாஸ் இயக்கம் மற்றும் இஸ்ரேலிய மக்கள் வரவேற்றுள்ளார்கள்.

காஸா பகுதியில் பெரும் உணவுத் தட்டுப்பாடு நிலவி வருவதால், உடனடியாக உணவுகளை வழங்குமாறு ஐ.நா சபை தனது உணவு வினியோக நிறுவனத்திற்கு கட்டளை பிறப்பித்துள்ளது. இனியாவது காஸாவில் வாழும் மக்கள் நிம்மதி பெருமூச்சை விடட்டும். 

source : https://www.dailymail.co.uk/news/article-14288733/Israel-Hamas-agree-ceasefire-Gaza-hostage-release-deal-mediators-announce.html