சில தினங்களுக்கு முன்னர், லண்டனில் உள்ள Oldham வைத்தியசாலையில், தாதி ஒருவர் குத்தப்பட்ட நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தி வெளியாகி இருந்தது. இவர் இந்திய வம்சாவழி பெண்ணான அச்சம்மா செழியன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மருத்துவமனையில் தாதியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சனிக்கிழமை இவரை, ஒரு நோயாளி கத்திரிக்கோலால் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதற்காக காரணம் என்னவென்றால், தான் நீண்ட நேரமாக காத்திருக்கிறேன் என்று அவர் பொலிசாரிடம் கூறியுள்ளார். கிரேட்டர் மேன்செஸ்டர் பொலிசார் விரைந்து செயல்பட்டு அன் நபரை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளார்கள். அவருக்கு நீதிமன்றம் பிணை கொடுக்க இன்று(15) மறுத்துள்ள நிலையில். அவர் தொடர்ந்தும் சிறையில் உள்ளார்.ஆனால்..
இதில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ரெய்டன் பகுதியைச் சேர்ந்த முகமது ருமன் ஹக் (வயது 37), போலீசாரால் கைது செய்யப்பட்டு, திங்கள் கிழமை மான்செஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். ஹக் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தாதியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர் உயிருக்கு போராடி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். அவர் மிகவும் அமைதியானவர், மிகவும் அன்பானவர் , அனைவரோடும் சகஜமாக சிரித்துப் பேசி, நோயாளிகளை கவனிப்பார் என்று சக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Source: https://www.mirror.co.uk/news/uk-news/breaking-oldham-hospital-stabbing-nurse-34479477