உலக வல்லரசு நாடு, உலகில் செல்வந்தர்கள் வாழும் நாடு… போனால் அமெரிக்காவுக்குத் தான் போய் குடியேற வேண்டும் என்று பலர் விரும்புவார்கள். ஆனால் அமெரிக்காவின் நிலையைப் பார்த்தால் பிச்சைக்கார ரேஞ்சுக்கு இருக்கு என்பது பலருக்கு தெரியாது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பெரும் தீ, இந்த காட்டுத் தீயை அணைக்க முடியாமல் அனைவரும் போராடி வரும் நிலையில், அருகில் உள்ள பல மாவட்டங்கள், மற்றும் மாநிலங்களில் உள்ள கள்வர்கள், மற்றும் உள்ளூர் திருடர்கள் அங்கே குவிந்த வண்ணம் உள்ளார்கள்.
எரியும் வீட்டில் கிடைத்த வரை லாபம் என்று சொல்வார்கள். அது போல இந்த திருடங்களும் தங்களை தீ அணைக்கும் படை அல்லது உதவியாளர் என்று கூறிக்கொண்டு சென்று திருடி வருகிறார்கள். அவர்களை கைது செய்யவே ஒரு தனிப்படை தேவை போல இருக்கிறது. ஆனால் அவர்கள் சொல்வதிலும் ஒரு ஞாயம் இருக்கிறது. நெருப்பில் எரிந்து நாசமாகப் போகிறது. அதனை நாங்கள் எடுத்தால் என்ன ?
ஏன் என்றால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் என்பது, பெரும் செல்வந்தர்கள் வந்து சொகுசு வீடுகளை வாங்கி அப்படியே விட்டுச் செல்லும் ஒரு இடம். அவர்கள் வருடம் ஒரு முறை அல்லது 2 தடவை வந்து தங்கள் சொகுசு வீட்டில் தங்கிச் செல்வார்கள். இதனால் உரிமையாளர் இல்லாமலே வீடு எரிந்து அப்படியே நாசமாகிக்கொண்டு இருக்கிறது. எனவே நாங்கள் எடுத்தால் என்ன ? என்று வாதிடுகிறார்கள் திருடர்கள்.