ஓசை இல்லாமல் போட்டுத் தள்ளுங்கள்: உதவிக்கு வந்த வட கொரிய ராணுவச் சிப்பாய்களை போட்டு தள்ளும் ரஷ்யப் படை

தமிழில் ஒன்றைச் சொல்வார்கள், “குடையும் குஞ்சமும் பரிசாகக் கொடுத்து, கடைசியில் குடையால் அடி வாங்குவது என்று” அது போலத் தான் இன்று அரங்கேறுகிறது ஒரு நாடகம். தன்னிடம் ஆட்கள் இல்லை பெரும் பற்றாக் குறையில் இருக்கிறேன், என்று ரஷ்ய அதிபர் பதறி அடித்து தனது நட்ப்பு நாடுகளான பெலருஸ் மற்றும் வட கொரியாவிடம் உதவி கேட்டார். இதனை அடுத்து வட கொரியா, தனது ராணுவத்தில் இருந்து சில ராணுவச் சிப்பாய்களை , ரகசியமாக ரஷ்யா அனுப்ப.

அவர்களை உக்ரைன் போருக்கு பாவித்து வந்தார் புட்டின். அவர்களை முன்னே நகர விட்டு, சரியான ஆயுத சப்பிளையை கொடுக்காமல் விட்டதால் உக்ரைன் ராணுவம் தாக்கும் போது அதிகமாக கொல்லப்பட்டவர்கள் வட கொரிய ராணுவத்தினர் தான். இதில் உக்ரைன் ராணுவம் பல வட கொரிய ராணுவச் சிப்பாய்களை உயிரோடு பிடித்துச் சென்று உலகிற்கு காட்டி வரும் நிலையில். தனது குட்டுகள் அனைத்து வெளியில் தெரிய ஆரம்பித்து விட்டது என்று பதறிய புட்டின். ஒரு உத்தரவை ரஷ்ய ராணுவத்திற்கு போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது எஞ்சியுள்ள, சுமார் 300 வட கொரிய ராணுவத்தையும், அப்படியே களத்தில் வைத்து சமயம் கிடைக்கும் போது போட்டுத் தள்ளுமாறு புட்டின் உத்தரவிட்டுள்ளாராம். இதனால் பெரும் பீதியில் உள்ள வட கொரிய சிப்பாய்கள், உக்ரைன் ராணுவத்திடம் சரணடைந்து வருகிறார்கள். இந்தச் செய்தி உண்மையா என்பது தெரியவில்லை. ஆனால் வட கொரிய சிப்பாய்களுக்கு மத்தியில் இது பரவலாக பேசப்பட்டு வருவதால், அவர்கள் அச்சமடைந்து உக்ரைன் ராணுவத்திடம் சரண்டைகிறார்கள்.  

Source : https://www.mirror.co.uk/news/uk-news/vladimir-putin-urged-kill-north-34470407