LYCA தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே, நடிகர் விஜய் மகனோடு டீலைப் போட்டு, ஒரு படம் தயாரிக்க ஒப்பந்தம் செய்து இருந்தார்கள். ஆனால் பல மாதங்கள் ஆகியும், லைககவிடம் இருந்து சாதகமான பதில் வராத நிலையில் Jason ஒரு கட்டத்தில் வெறுப்படைந்து விட்டாராம். இதனால் தன்னுடைய மேனேஜர் சுரேஷ் சந்திராவுக்கு போனைப் போட்டு, தயாரிப்பு நிறுவனத்தை மாற்றி விடலாமா என்று பேசிக் கொண்டு இருந்துள்ளார்.
சுரேஷ் சந்திரா அந்த நேரத்தில் டுபாயில் இருந்துள்ளார். அதுவும் அஜித் கார் ரேஸை பார்க சென்றிருந்தார். விஜய் மகன் பேசிக்கொண்டு இருந்தவேளை இதனைக் கவனித்த தல அஜித், அவர் அருகில் வந்து யாரோடு பேசுகிறீர்கள் என்று கேட்க்க, சுரேஷ் சந்திரா விஜய் மகன் என்று சொல்ல, உடனே போனை தன்னிடம் தரச்சொல்லி, ஜேசனோடு பேசியுள்ளார் அஜித். ஒன்றும் கவலை கொள்ள வேண்டாம். விரக்த்தியடைய வேண்டாம். என்று ஆறுதல் கூறியுள்ளார்.
சென்னையில் பல தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளது, Lyca பிடிக்கவில்லை என்றால் நீங்கள் வேறு கம்பெனிக்கு மாறலாம், நானே ஏற்பாடு பண்ணித் தருகிறேன் என்று ஆறுதல் கூறியுள்ளார் அஜித். ஆனால் என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை, இந்த நிகழ்வு நடந்து சில தினங்களில், லைக்கா மீண்டும் ஜேசனை தொடர்பு கொண்டு, தாம் படத்தை தயாரிக்க ரெடி என்று பச்சைக் கொடி காட்டிவிட்டார்கள்.
இதனால் ஜேசன் உற்சாகமாக உள்ளாராம். வெளியில் தான் அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்கள் அடித்துக் கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் தல, மற்றும் தளபதி இருவருமே மிகவும் நெருங்கிய நண்பர்கள். 2026 தேர்தலில் எப்படி என்றாலும் தல அஜித் தளபதி விஜய்க்கு ஆதரவாக பேசுவார் என்ற கருத்து மக்கள் மத்தியில் இப்போதே பரவி வருகிறது.