பாலா தயாரிப்பில் வெளியாகி, பாக்ஸ் அபீசை நிரப்பிக்கொண்டு இருக்கும் படம் தான் வணங்கான். இந்தப் படத்தை முதலில் தயாரிக்கும் போது, பாலா மதுரையில் உள்ள பைனாசியர் ஒருவரிடம் 3 கோடி கடன் பெற்றுள்ளார். பின்னர் நடந்த விடையங்கள் ஊர் அறிந்ததே. தற்போது 10ம் திகதி படத்தை ரிலீஸ் செய்யும் வேளை, சில வெளிநாடுகளில் காட்சிகள் ரத்துச் செய்யப்பட்டதோடு, தமிழகத்திலும் சில திரையரங்குகளில் காட்சி ரத்துச் செய்யப்பட்டது.
மதுரை அன்பு என்ற பெரிய பைனாசியர் ஒருவர் உள்ளார். இவரை பொதுவாக சினிமா பீஃல்டில் உள்ளவர்களே அறிவார்கள். இவர் தனக்கு அந்த 3 கோடி கிடைக்காமல் வணங்கான் படத்தை வெளியிட முடியாது என்று, சங்கத்தில் தடை உத்தரை வாங்கி விட்டார். இதனால் தான் வணங்கான் படம் சில இடங்களில் வெளியிட முடியாத நிலை தோன்றியது. இதனை அடுத்து பாலா பல முறை தொடர்பு கொள்ள முனைந்தும் மதுரை அன்புவோடு பேச முடியவில்லை.
பின்னர் அந்த 3 கோடியை அவர் வங்கிக்கு அனுப்பிய பின்னரே, தடை உத்தரை மதுரை அன்பு நீக்கியுள்ளார். இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால், மதுரை அன்பு இப்படியான நேரங்களில், தனது மோபைல் போனை சுவிஜ் ஆப் செய்து விடுவாராம். பணம் வந்த பின்னரே, இயக்குனரோடு பேசுவாராம்.